பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் படத்தில் விஜய் நடனம் ஆட காரணம் என்ன?- பிரபுதேவா ஓபன் டாக்
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் இந்த வருடம் மட்டுமே இரண்டு படங்கள் வெளியாகிவிட்டது, வாரிசு மற்றும் லியோ.
வாரிசு விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக பெரிய அளவில் அடி வாங்கியது, ஆனால் லியோ கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியாக மாஸ் காட்டி வருகிறது. 12 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடும் இந்த படம் இதுவரை ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
ரூ. 250 கோடி முதல் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்துவதால் படக்குழு நேற்று (நவம்பர் 1) வெற்றிவிழா கொண்டாடினார்கள்.
அதில் விஜய் பேசியது வீடியோ சமூக வலைதளங்களில் படு வைரலானது.
விஜய் குறித்து பிரபுதேவா
நடிகர் விஜய் தமிழை தாண்டி மற்ற மொழிகளில் அவ்வளவாக தலைகாட்டியது இல்லை. அப்படி பாலிவுட் சினிமாவில் டாப் நாயகன் அக்ஷய் குமார் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் Rowdy Rathore என்ற படம் உருவானது. அப்படத்தில் இடம்பெற்ற சின்தாதா என்ற பாடலில் சிறப்பு தோற்றத்தில் விஜய் ஒரு நடனம் போட்டிருந்தார்.
இதுகுறித்து அண்மையில் பிரபுதேவாவிடம் அக்ஷய் குமார் விஜய் இருக்கும் புகைப்படத்தை காட்டி போக்கிரி படத்தின் போது எடுத்ததா என கேட்கப்பட்டது. அதற்கு அவர், இல்லை, இது ஹிந்தியில் நான் ஒரு படம் பண்ணபோது எடுத்தது.
அப்போது விஜய் படப்பிடிப்பில் இருந்தார், நான் போன் செய்து ஒரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வேண்டும் செய்கிறீர்களா? என்று கேட்டேன்.
அவர் எதுவுமே சொல்லாமல் பண்ணலாமே என்று சொல்லி வந்து அந்த பாட்டுக்கு நடனமாடி கொடுத்துவிட்டு சென்றார், அந்த படத்தில் அக்ஷய்குமார் நடித்திருந்தார். ரொம்ப ஸ்வீட் பர்சன் என்று கூறியிருக்கிறார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
