விஜய் டிவியின் புதிய ஹிட் சீரியல் இயக்குனர் காலமானார்... வருத்தத்தில் பிரபலங்கள்
பிரபுதேவா
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு ஹிட் படம் அமையும். அப்படி பிரபுதேவா நடிப்பில் கடந்த 2001ம் ஆண்டு வெளியான திரைப்படம் மனதை திருடிவிட்டாய்.
பட கதை, நடிகர்கள், பாடல்களை தாண்டி படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் இப்போதும் ஹைலைட்டாக கொண்டாடப்படும்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் தயாரான இந்த படத்தை நாராயண மூர்த்தி இயக்கியிருந்தார். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகளே என் மருமகளே என்ற சீரியலை இயக்கி வருகிறார்.
புதியதாக தொடங்கப்பட்ட இந்த தொடர் தெலுங்கில் ஹிட்டடித்த Maguva O Maguva என்ற சீரியலின் ரீமேக். ரேஷ்மா பசுபுலேட்டி மற்றும் வர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
தற்போது என்ன தகவல் என்றால் இப்பட இயக்குனர் நாராயண மூர்த்தி நேற்று (செப்டம்பர் 23) உயிரிழந்துள்ளார். அவரின் உயிரிழப்பு செய்தி தெரிந்துகொண்ட பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.