தளபதி 66ல் பிரபு தேவா.. முதல் முறையாக வெளிவந்த படப்பிடிப்பு புகைப்படம்
விஜய்யின் தளபதி 66
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 66.
தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டார் நடிக்கின்றனர்.
தமன் இசையில் விஜய் முதல் முறையாக நடிக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் மூன்று பாடல்களை இசையமைத்துவிட்டதாக அவர் கூறியிருந்தார்.
படப்பிடிப்பு புகைப்படம்
சமீபத்தில் இப்படத்தின் ஒரு பாடலுக்கு, நடன இயக்குனராக பிரபு தேவா கமிட்டாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியிருந்தது.
போக்கிரி, வில்லு படத்தை தொடர்ந்து தளபதி 66ல் விஜய்யுடன் பிரபு தேவா இணைந்துள்ளார் என்று ரசிகர்கள் ஆனந்தமடைந்தனர்.
இந்நிலையில், தளபதி 66 படப்பிடிப்பில் இருந்து பிரபு தேவாவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
பலர் இதை தளபதி 66 படப்பிடிப்பு என்று கூறி வரும் நேரத்தில், இது வேறொரு படத்தின் படப்பிடிப்பு என்றும் சிலர் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.