இலங்கை பிரதமரை திடீரென நேரில் சந்தித்துள்ள நடிகர் பிரபுதேவா- ஏன் தெரியுமா?

By Yathrika Sep 29, 2023 09:00 AM GMT
Report

பிரபு தேவா

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக, நடன இயக்குனராக, இயக்குனராக இருப்பவர் பிரபு தேவா. இயக்குனராக அதிகம் இல்லை என்றாலும் நடிகராகவும், நடன இயக்குனராகவும் கலக்கி வருகிறார்.

தொடர்ந்து படங்கள் நடித்துவரும் பிரபுதேவா இப்போது அறிமுக இயக்குனர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகி வரும் முசாசி என்ற படத்தில் நடிக்கிறார்.

சொந்தமாக ஜெட் விமானம் வைத்திருக்கும் ஒரே தென்னிந்திய நடிகை நயன்தாரா- மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

சொந்தமாக ஜெட் விமானம் வைத்திருக்கும் ஒரே தென்னிந்திய நடிகை நயன்தாரா- மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

ஆக்ஷன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இலங்கை பிரதமரை திடீரென நேரில் சந்தித்துள்ள நடிகர் பிரபுதேவா- ஏன் தெரியுமா? | Prabhu Deva Met Srilankan Prime Minister

பிரதமர் சந்திப்பு

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது, படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் இலங்கையில் முகாமிட்டுள்ளனர்.

பிரபுதேவாவின் முசாசி படக்குழுவினருக்கு இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பினை ஏற்ற படக்குழுவினர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றனர்.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களிலும் வலம் வருகிறது. 

இலங்கை பிரதமரை திடீரென நேரில் சந்தித்துள்ள நடிகர் பிரபுதேவா- ஏன் தெரியுமா? | Prabhu Deva Met Srilankan Prime Minister

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US