பிரபுதேவா - ஐஸ்வர்யா ராய் தவறவிட்ட சூப்பர் ஹிட் படம்?..அதும் 90ஸ் கீட்ஸின் பேவரைட் பிலிம்
பிரபு தேவா
நடிகர், நடன ஆசிரியர், இயக்குனர் எனப் பன்முகங்களை கொண்டவர் தான் பிரபு தேவா. 90ஸ் காலகட்டத்தில் பல வெற்றி படங்களை கொடுத்து கொடி கட்டி பறந்தார் என்றே சொல்லலாம்.
அதிலும் இவர் நடிப்பில் வெளிவந்த காதலன், ரோமியோ, காதலா காதலா போன்ற படங்கள் பட்டிதொட்டி பிரபலமானது.

சூப்பர் ஹிட் படம்?
இந்நிலையில் பிரபு தேவா தவறவிட்ட சூப்பர் ஹிட் படத்தை குறித்து நாம் பாக்கலாம்.
கடந்த1998 -ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் லிவிங்ஸ்டன் நடிப்பில் வெளியான சொல்லாமலே படம் மாபெரும் வெற்றி பெற்றது.
படத்தின் கதை அம்சம், ஒரு இளைஞன் மிக அழகான ஒரு பெண்ணை காதலிக்கிறான். ஒரு கட்டத்தில் ஹீரோ வாய் பேச முடியாத ஊமை போல் நடிக்கிறான்.
ஹீரோ உண்மையில் ஊமை என்று நினைத்து இரக்கம் கொண்டு காதலில் விழுகிறார் ஹீரோயின் . இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இன்றளவும் சோகமாகவே இருக்கும்.
சொல்லாமலே படத்தில் முதல் முதலில் ஹீரோவாக பிரபு தேவா, ஹீரோயினாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருந்தனர். இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வந்த நிலையில் இருவரும் சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தனர்.
அதன் பின்னர் பிரபுதேவாவிற்கு பதிலாக லிவிங்ஸ்டனும், ஐஸ்வர்யா ராய்க்கு பதில் கௌசல்யாவும் நடித்தது குறிப்பிடத்தக்கது.

உயிரை பணயம் வைத்து ஸ்டண்ட் காட்சியில் நடித்த கமல்!..பதறவைக்கும் வீடியோ காட்சி
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri