பிரபல எழுத்தாளரின் இயக்கத்தில் நடிகர் பிரபு தேவா.. பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு
பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் பிரபுதேவா, தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் தற்போது யங் மங் சங், பொன் மாணிக்கவேல், பஹீரா, பிளாஷ்பேக், மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை போன்ற படங்கள் உருவாகி வருகின்றன.
இந்நிலையில், நடிகர் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை பிரபல பாடலாசிரியர் பா.விஜய் இயக்குகிறார்.
இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். மேலும் கலையரசன், அர்ஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் பிரபுதேவா, பா.விஜய், மகிமா நம்பியார் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இரவு முழுவதும் அவர்களை மகிழ்விக்கவே... - அழகிப்போட்டியில் இருந்து வெளியேறிய பெண் குற்றச்சாட்டு IBC Tamilnadu
