கோட் படத்தில் நடித்துள்ள நடிகர் பிரபு தேவாவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
பிரபுதேவா
இந்திய சினிமா ரசிகர்கள் மைக்கேல் ஜாக்சனாக கொண்டாடப்படும் பிரபலம் பிரபுதேவா.
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பலரை தனது நடன அமைப்பின் மூலம் மாஸாக நடனம் ஆட வைத்தவர்.
காதலன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரபுதேவா ராசைய்யா, விஐபி, மின்சாரக்கனவு, டைம் என ஏராளமான படங்கள் தொடர்ந்து நடித்தார்.
நடிகர், நடன அமைப்பாளர் என கலக்கிவந்த பிரபுதேவா 2005ம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானார். தெலுங்கில் அவர் இயக்கிய முதல் படம்தான் தமிழில் சம்திங் சம்திங் என ரீமேக் செய்யப்பட்டது.
பின் தமிழ் பக்கம் வந்த பிரபுதேவா போக்கிரி, வில்லு, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
இப்போது விஜய்யுடன் இணைந்து வெங்கட் பிரபு இயக்கிய கோட் படத்தில் நடித்துள்ளார், நாளை படம் செம மாஸாக வெளியாக இருக்கிறது.
சொத்து மதிப்பு
51 வயதாகும் பிரபுதேவா அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார். சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் சொகுசு வீடுகளும் இருக்கின்றன.
நடிகர் பிரபுதேவாவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 100லிருந்து ரூ. 150 கோடி சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
