52 வயதாகும் நடன புயல் பிரபு தேவாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
பிரபு தேவா
நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் பிரபு தேவா. இவர் தேசிய விருது, கலைமாமணி, பத்மஸ்ரீ என பல விருதுகளை வென்றுள்ளார்.
இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என அனைவராலும் கொண்டாடப்படும் இவருக்கு இன்று பிறந்தநாள். ஆம், நடிகர் பிரபு தேவாவின் 52வது பிறந்தநாளான இன்று, ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், பிரபு தேவாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருக்கு மைசூர் அருகே ஏக்கர் கணக்கில் இடம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சென்னை, மும்பை ஆகிய இடங்களில் சொகுசு வீடுகள் உள்ளது.
பென்ஸ், BMW, Audi என பல சொகுசு கார்களும் உள்ளன. இவர் ஒரு படத்திற்காக ரூ. 2 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆகமொத்தம் இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 170 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.