பிரபு தேவாவின் அடுத்த படத்தின் தலைப்பு இதுவா.. ஹீரோயின் யார் தெரியுமா
பிரபு தேவா
இந்தியளவில் பிரபலமான நட்சத்திரம் பிரபு தேவா. இவர் இயக்குனர், நடன இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் என்பதை நாம் அறிவோம்.
இவர் நடிப்பில் கடைசியாக பகீரா எனும் திரைப்படம் வெளிவந்தது. அடுத்ததாக பிளாஷ் பேக் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்திற்கு பின் பிரபு தேவா நடிக்கவுள்ள படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த படத்தின் அப்டேட்
எஸ்.ஜே. சினு என்பவரின் இயக்கத்தில் பேட்ட ராப் எனும் தலைப்பில் உருவாகும் படத்தில் பிரபு தேவா நடிக்கவுள்ளா. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வேதிகா கமிட்டாகியுள்ளார்.
பிரபு தேவாவின் நடிப்பில் வெளிவந்த காதலன் படத்தில் இடம்பெறும் பேட்ட ராப் பாடலின் தலைப்பையே, இப்படத்திற்கு டைட்டிலாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டி. இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் 15ஆம் தேதி துவங்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அந்த மாதிரியான வீடியோ காட்டி அதே மாதிரி பண்ண சொல்லி அடிச்சாரு.. பகீர் கிளப்பிய நடிகை சம்யுக்தா

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
