பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா முதன்முறையாக நடித்துள்ள ஆல்பம் பாடல்... வெளிவந்த வீடியோ
பிரபுதேவா
இந்திய சினிமா ரசிகர்களால் நடனப்புயல் என கொண்டாடப்படுபவர் தான் பிரபுதேவா.
நடனம், நடிப்பு, இயக்கம் என பல விஷயங்களில் தன்னை நிரூபித்துள்ளார். படங்கள் நடிப்பது, மற்ற நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பது என சினிமாவில் மிகவும் ஆக்டீவாக உள்ளார்.
கடந்த சில மாதங்களாக இவர் வடிவேலுவுடன் சேர்ந்து எடுத்த வீடியோக்களை வெளியிட மிகவும் வைரலாகி வந்தது. தற்போது பிரபுதேவா மகன் ரிஷி தேவா குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது.

என்ன விஷயம்
தற்போது பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா முதன்முதலாய் என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் இப்பாடலை எழுதி இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இதில் பிரபுதேவா மகன் ரிஷி தேவா, நடிகை கைரா ஆகியோர் இணைந்து நடனமாடி நடித்திருக்கிறார்கள்.

மெலோடியும் ராப் இசையும் கலந்த இந்த ஆல்பத்தில் உள்ள ராப் பாடலை இசைக் கலைஞர் ஆதித்யா பாடியிருக்கிறார்.
தனது முதல் ஆல்பம் பாடலிலேயே அப்பாவை போல நடனத்தில் அசத்தியுள்ளார் ரிஷி, இதோ அந்த வீடியோ,
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri