தளபதி 66-ல் விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. வெளிவந்த சூப்பர் தகவல்
விஜய்யின் தளபதி 66
வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் முதல் முறையாக நடித்து வரும் திரைப்படம் தளபதி 66. தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சரத்குமார், பிரகாஷ் ராஜ் போன்ற பல அனுபவம் உள்ள நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்ததை அடுத்து, தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.
பிரபு தேவா - விஜய்
இப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் கைகோர்த்துள்ளார் பிரபு தேவா என்றும், இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக அவர் பணிபுரிந்துள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

ஆனால், தற்போது வெளிவந்துள்ள செய்தியின்படி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு படங்களுக்கும் பிரபு தேவா தான், நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளாராம்.
இதன்முலம் விஜய், பிரபு தேவா இருவரும் இணைந்து சில நொடிகள் நடனம் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது.
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri