50 வயதில் தனக்கு பிறந்த மகள் மற்றும் மனைவியுடன் திருப்பதி கோவில் வந்த பிரபு தேவா- புகைப்படம் இதோ
பிரபுதேவா
தமிழ் சினிமாவின் ஏன் இந்திய சினிமாவின் மைக்கெல் ஜாக்சனாக கொண்டாடப்படுபவர் தான் பிரபுதேவா.
திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன அமைப்பாளர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் 1995ம் ஆண்டு ராம்லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா மற்றும் ஆதித் தேவா என 3 மகன்கள் பிறந்தனர்.
இதில் இவர்களது மூத்த மகன் விஷால் 12 வயதில் 2008ம் ஆண்டு காலமானார். பின் சில காதல் கிசுகிசுவில் மாட்டிய பிரபு தேவா சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார்.
குடும்பத்துடன் திருப்பதி
நடிகர் பிரபுதேவாவிற்கு ஹிமானி என்பவருடன் மறுமணம் நடந்தது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அதோடு அவர்களுக்கு அண்மையில் தான் பெண் குழந்தையும் பிறந்தது.
50 வயதில் பெண் குழந்தை பெற்றது சந்தோஷம் என பிரபுதேவாவே ஒரு பேட்டியில் கூறியிருப்பார். இந்த நிலையில் தனது அப்பா, மனைவி மற்றும் மகள் என குடும்பத்துடன் பிரபுதேவா திருப்பதி கோவிலுக்கு வந்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
பட்டய கிளப்பி வரும் சிவகார்த்திகேயனின் மாவீரன் பட இதுவரையிலான வசூல் விவரம்