பிரபு தேவாவின் இரண்டாவது மனைவி இவர் தானா..? முதன் முறையாக ஜோடியாக வெளியான புகைப்படம்
நடிகர் பிரவுதேவா கடந்த 1995ஆம் ஆண்டு ரமலதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதன்பின் நடிகை நயன்தாராவுடன் பிரபு தேவாவிற்கு காதல் ஏற்பட்டது. சில ஆண்டுகள் தொடர்ந்து இந்த காதல், திருமணம் வரை சென்றது.
ஆனால், பிரபு தேவாவின் முதல் மனைவி ரமலதா, மகளிர் அமைப்புகளை நாடி இவர்களுடைய காதலுக்கு முட்டுக்கட்டை எழுப்பினர்.
இதனால், பிரபு தேவா கடந்த 2011ஆம் ஆண்டு ரமலதாவை விவாகரத்து செய்தார். இதன்பின் நயன்தாராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நயன்தாராவையும் பிரிந்தார்.
இதன்பின், பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் டாக்டர் ஹிமானி என்பவரை பிரபு தேவா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்று தகவல் வெளியானது. இந்த தகவலை பிரபு தேவாவின் சகோதரர் உறுதி செய்தார்.
இந்நிலையில் நடிகர் பிரபு தேவா தனது இரண்டாவது மனைவியுடன் இன்று திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளாராம். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..