முதன்முறையாக தனது மகனுடன் மேடையில் நடனம் ஆடிய பிரபுதேவா.. வீடியோவுடன் இதோ
பிரபுதேவா
மைக்கெல் ஜாக்சன், உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நடன கலைஞர்.
ஆனால் இந்திய சினிமா மைக்கெல் ஜாக்சனாக பார்க்கப்படுவது பிரபுதேவாவை தான்.
1994ம் ஆண்டு இந்து படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் காதலன், ராசய்யா, லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, விஐபி, காதலா காதலா என தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்து வந்தவர் அப்படியே தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்க துவங்கினார்.
நடன இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார்.
மகனுடன் நடனம்
தமிழ் சினிமா இசையமைப்பாளர்களின் இசைக் கச்சேரிகள் இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டது.
எங்கு பார்த்தாலும் பிரபலங்களின் இசைக் கச்சேரிகள் நடக்கிறது. இப்போது பிரபுதேவா முதன்முறையாக நடன நிகழ்ச்சி நடத்தியுள்ளார். சென்னையில் YMCA மைதானத்தில் சமீபத்தில் பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வடிவேலு, தனுஷ், இயக்குனர் ஷங்கர், எஸ்.ஜே.சூர்யா என பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நடன நிகழ்ச்சியில் பிரபுதேவா தனது மகன் ரிஷி ராகவேந்தர் தேவாவை அறிமுகம் செய்தார்.
அதோடு தனது மகனுடன் பேட்ட ராப் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். அந்த வீடியோவை பிரபுதேவாவே தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.

£4.75 மில்லியன் மதிப்புள்ள 18 காரட் தங்க கழிப்பறை: துணிகர திருட்டின் சிசிடிவி காட்சிகள்! News Lankasri
