நடிகர் பிரபு தேவாவின் முதல் மனைவிக்கு பிறந்த இரு மகன்களை பார்த்துள்ளீர்களா.. இதோ
இந்திய சினிமாவில் நடன இயக்குனராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் பல படங்களில் பணிபுரிந்தவர் பிரபு தேவா.
இவர் கடந்த 1995ஆம் ஆண்டு ராம்லத் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
15 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும், கடந்த 2011ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர்.
இவர்களின் விவாகரத்துக்கு நடிகை நயன்தாராவுடன், பிரபு தேவாவிற்கு ஏற்பட்ட காதல் என்று கூறப்படுகிறது.
திருமணம் செய்துகொள்ள தயாராக இருந்த நயன்தாரா - பிரபு தேவா, திடீரென காதல் முறிவு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
நயன்தாராவுடன் ஏற்பட்ட காதல் முறிவிற்கு பிறகு, பல ஆண்டுகள் கழித்து, பிரபு தேவா மீண்டும் இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது.
நடிகர் பிரபு தேவாவிற்கும், முதல் மனைவிக்கும் மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் விஷால், புற்றுநோய் காரணமாக மரணமடைந்து விட்டார்.
இந்நிலையில், நடிகர் பிரபு தேவா தனது மகன்கள் ரிஷி தேவா மற்றும் ஆதித் தேவாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..