ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த சின்னத்தம்பி படத்திற்காக பிரபு, குஷ்பூ வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ
சின்னத்தம்பி
பி. வாசு இயக்கத்தில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளிவந்து ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த திரைப்படம் சின்னத்தம்பி.
பிரபு, குஷ்பூ இணைந்து நடித்து வெளிவந்த இப்படம் மக்கள் மனதில் இருந்து இன்றும் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

இளையராஜாவின் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற, அரைச்ச சந்தானம், தூளியிலே ஆடவந்த, குயில புடிச்சு கூண்டில் அடைச்சு என பல பாடல்கள் சூப்பர்ஹிட்டானது.
பிரபு, குஷ்பூ மட்டுமின்றி மனோரமா, ராதாரவி, உதயகுமார், கவுண்டமணி என பல நட்சத்திரங்களின் இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக விளங்கினார்கள்.

வாங்கிய சம்பளம்
இந்நிலையில், ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த சின்னத்தம்பி படத்திற்காக நடிகர் பிரபு ரூ. 11 லட்சம் சம்பளமும், நடிகை குஷ்பூ ரூ. 4 லட்சம் சம்பளமும் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.