வெயிலில் நின்ற குழந்தைகள்.. பிரபுதேவாவை திட்டி தீர்த்த பெற்றோர்! வீடியோ காலில் விளக்கம்
டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயங்குனர் என பல திறமைகள் கொண்டவர் பிரபுதேவா. அவரது நடனத்திற்கு என்றே பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
இந்நிலையில் "100 நிமிடங்கள் 100 பிரபுதேவா பாடல்" என்ற உலகசாதனை முயற்சிக்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பிரபுதேவா நேரில் கலந்துகொள்ள இருந்தார்.
சுமார் 5000 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்க வெயிலில் நின்றிருந்தனர். ஆனால் பிரபுதேவா வரவே இல்லை. அதனால் கோபமான பெற்றோர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் உடன் வாக்குவாதம் செய்தனர்.
மன்னிப்பு கேட்ட பிரபுதேவா
அதன் பின் வீடியோ காலில் பேசிய பிரபுதேயா தான் உடல்நிலை காரணமாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என விளக்கம் கொடுத்திருக்கிறார்.
7.30 மணிக்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சி 9 மணி ஆகியும் தொடங்கவில்லை. அதன் பிறகு தான் பிரபுதேவா வரவில்லை என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் எல்லோரும் பிரபுதேவாவை திட்டி தீர்த்து இருக்கின்றனர்.
கைக்குழந்தையோட உக்காந்துட்டு இருக்கோம்... மாஸ்டர் எத்தன மணிக்கு வருவாரு… பிரபு தேவாவுக்காக காத்திருந்து கொந்தளித்த பெற்றோர்#PrabhuDeva | #Dance | #Danceshow |#ibctamil pic.twitter.com/aNlyBzDkDr
— IBC Tamil (@ibctamilmedia) May 2, 2024

பிரபல கிரிக்கெட் வீரர் படுக்கைக்கு அழைத்தார் - முன்னாள் கிரிக்கெட்டர் மகள் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu
