நல்ல பேரு வாங்க விட மாட்டாங்களே.. இயக்குனர் செயலால் புலம்பிய பிரபுதேவா
டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என பல திறமைகள் கொண்டவர் பிரபு தேவா. அவர் தற்போது மை டியர் பூதம் என்ற படத்தில் பூதமாக நடித்து இருக்கிறார்.
மஞ்சப்பை பட புகழ் இயக்குனர் ராகவன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த படத்தை வரும் 15ம் தேதி ரிலீஸ் செய்கிறது.

மை டியர் பூதம் படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் பிரபுதேவா ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு வருகிறார். தான் ஒரு காட்சியில் மிக நீளமான வசனத்தை ஒரே ஷாட்டில் நடித்ததாகவும், படத்தில் அது அப்படியே வரும் என எதிர்பார்ததாகவும் கூறி இருக்கிறார்.
ஆனால் இயக்குனர் அந்த காட்சியை வெட்டி இடையில் பையன் முகம் வரும்படி செய்துவிட்டாராம். கமல்ஹாசனை inspiration ஆக எடுத்துக்கொண்டு அந்த காட்சியில் நடித்தால் இப்படி செய்துவிட்டாரே என இயக்குனர் மீது பிரபுதேவா வருத்தமாக பேசி இருக்கிறார்.
நல்ல பேரு வாங்க விட மாட்டாங்களே என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Behind the emotional scene in MY DEAR BOOTHAM❤️❤️❤️????? pic.twitter.com/cZh5bDlsIS
— Prabhudheva (@PDdancing) July 6, 2022