வனிதாவை காதலித்து திருமணம் செய்ய ஆசைப்பட்ட பிக் பாஸ் பிரதீப்.. வீடியோ இதோ
பிரதீப்
தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் 7 வீட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கும் நபர் பிரதீப். இவர் கவினுடன் நண்பர் என்றும், பிரபல நடிகர் என்றும் அனைவரும் அறிவோம்.
ஏற்கனவே பிக் பாஸ் 3ல் தனது நண்பன் கவினை பார்க்க வந்த இவர், செய்த செயல்கள் எதையுமே யாராலும் மறக்கவே முடியாது.
குறிப்பாக கவினை அடித்தது தான் பெரிதளவில் பேசப்பட்டது. ஆனால், தற்போது பிக் பாஸ் 3ல் பிரதீப் பேசிய மற்றொரு வீடியோவும் வைரலாகி வருகிறது.
வனிதா - பிரதீப்
இதில், வனிதாவை பார்த்து 'நீங்க மட்டும் சின்ன பொண்ணா, கல்யாணம் ஆவாம இருந்தீங்கனா கண்டிப்பாக நான் உங்களை காதலிச்சு இருப்பேன். உங்கள மாதிரி ஒரு ஆள் கூட இருந்தா நான் கண்டிப்பாக இந்த உலகத்தையே ஜெயிச்சுருவேன்' என பேசினார்.
அப்போது ஷெரின், 'இப்போவும் வனிதா சிங்கிள் தான்' என கூற அதற்கு பிரதீப் 'நான் யோசித்து பார்க்கிறேன்' என கூறுவார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வர, வனிதா விஜயகுமார் இந்த வீடியோவிற்கு சமூக வலைத்தளத்தில் ஜாலியாக ரியாக்ஷன் செய்துள்ளார்.
இதோ அந்த வீடியோ..
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) October 26, 2023