பூர்ணிமா அம்மாவுக்கு வாக்கு கொடுத்ததால் அமைதியா இருக்கேன்.. பிரதீப் ஆண்டனி கோபமாக போட்ட பதிவு
பிக் பாஸ் 7ம் சீசன் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டவர் பிரதீப் ஆண்டனி. அதற்கு முக்கிய காரணம் பூர்ணிமா மற்றும் மாயா அகியோர் தான்.
ரெட் கார்டு கொடுக்கப்பட்டது சரியா என அப்போது ஒரு பெரிய சர்ச்சையை வெடித்தது. இருப்பினும் அது போட்டியாளர்கள் எடுத்த முடிவு, அதில் எனக்கு சம்பந்தம் இல்லை என கமல் கூறி சமாளித்தார்.
பிக் பாஸ் ஷோ தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் பூர்ணிமா 16 லட்சம் ருபாய் பணத்துடன் வெளியேறி இருக்கிறார். அது நல்ல முடிவு என எல்லோரும் பூர்ணிமாவை பாராட்டி வருகின்றனர்.

ஏன் அமைதியா இருக்கேன்..
பூர்ணிமாவின் ரசிகர்கள் சிலர் பிரதீப்பை வம்புக்கு இழுக்க, தற்போது பிரதீப் ஒரு விஷயத்தை கோபமாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
"பூர்ணிமா அம்மா கிட்ட வாக்கு குடுத்த ஒரே காரணத்துக்காக அமைதியா இருக்கேன். கூலிக்கு மார் அடிக்குற கும்பல்லாம் இஷ்டத்துக்கு பேசி வாயை கிளறாதீங்க. எனக்கு அடுத்தவர் கேரக்டரை பற்றி மோசமாக பேசி கேம் விளையாடுவது பிடிக்காது" என பிரதீப் கூறி இருக்கிறார்.
Poornima Amma kitta vaaku kudutha ore karanathukaaga amaithiya iruken. Kooli ku maar adikura gumbal laam ishtathukku pesi vaiya kelaratheenga. I don't play character assassination games, it's not my vibe.#PolachuPonga#UngaPolappaKedukkaMaten pic.twitter.com/uZSmVEtINq
— Pradeep Antony (@TheDhaadiBoy) January 4, 2024
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri