வனிதா தாக்குதல் விவகாரம்.. பிரதீப் ஆன்டனி மெசேஜ் screenshot உடன் வெளியிட்ட விளக்கம்

By Parthiban.A Nov 26, 2023 10:53 AM GMT
Report

நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிக பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியை வனிதா தினமும் ஒரு பிரபல youtube சேனலில் விமர்சனம் செய்து வருகிறார்.

நேற்று இரவு அந்த விமர்சன நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது மர்ம நபர் ஒருவர் தன்னை தாக்கியதாக அதிர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் வனிதா. பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்ததை குறிப்பிட்டு தான் அந்த நபர் தாக்கினாராம்.

வனிதா தாக்குதல் விவகாரம்.. பிரதீப் ஆன்டனி மெசேஜ் screenshot உடன் வெளியிட்ட விளக்கம் | Pradeep Antony Reveal Whatsapp Vanitha Vijayakumar

மெசேஜ்.. screenshot வெளியிட்ட பிரதீப்

தற்போது பிரதீப் ஆண்டனி தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு பெற்று வெளியேறிய பிறகு மற்ற போட்டியாளர்கள் மற்றும் பிரபலங்கள் அனுப்பிய மெசேஜ்களை வெளியிட்டு இருக்கிறார்.

வனிதா விஜயகுமாருக்கு அவர் அனுப்பிய மெசேஜையும் வெளியிட்டு இருக்கிறார். 'நான் mentally unstable என யூகித்துக்கொண்டு என்னை பற்றி இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்' என வனிதாவை தாக்கி பிரதீப் மெசேஜ் அனுப்பி இருக்கிறார். பேச வேண்டும் என வனிதாவும் ரிப்ளை அனுப்பி இருக்கிறார்.

இந்த ஸ்கிரீன்ஷாட் வெளியிட்டு பிரதீப் கூறியிருப்பதாவது..

"எந்த போட்டியாளருக்கு/நபருக்கு எதிராகவும் நான் இல்லை. நான் அவர்களிடம் இப்படி தான் பேசுகிறேன். வனிதா விஜயகுமார் - உங்களுக்கு என்ன நடந்தது என தெளிவாக எனக்கு தெரியாது, ஆனால் உங்களுக்காக வருந்துகிறேன்."

"ரெஸ்ட் எடுங்க. ஜோவிகா ரொம்ப ஸ்மார்ட், அவராகவே ஜெயிப்பார். உங்க ஹெல்ப் அவருக்கு தேவையில்லை" என பிரதீப் விமர்சித்து இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US