டிக்கெட் புக்கிங்கில் சாதனை படைத்த டிராகன்.. அஜித், தனுஷ், சூர்யாவை பின்னுக்கு தள்ளிய பிரதீப்
டிராகன்
இளம் சென்சேஷனல் நடிகர்களில் ஒருவரான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் டிராகன். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கியிருந்தார்.
ஓ மை கடவுளே படத்திற்கு பின் இவர் இயக்கத்தில் உருவான படம் இது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். படம் மாபெரும் வெற்றியை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.
சாதனை
இந்த நிலையில், டிக்கெட் புக்கிங்கில் டிராகன் திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் நேற்று மட்டுமே புக் மை ஷோ App-ல் 288K டிக்கெட்ஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டில் இருந்து 2025 இதுவரை, புக் மை ஷோ App-ல் முதல் வார சனிக்கிழமை அன்று அதிக டிக்கெட் புக் செய்யப்பட்ட படங்களில் நான்காவது இடத்தை டிராகன் பிடித்துள்ளது.
கோட் முதலிடத்திலும், வேட்டையன் மற்றும் அமரன் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளது. இந்த குறிப்பிட்ட பட்டியலில் தனுஷின் ராயன், அஜித்தின் விடாமுயற்சி, சூர்யாவின் கங்குவா ஆகிய படங்களை டிராகன் பின்னுக்கு தள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.