பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி... வெளிவந்த விவரம்
டியூட் படம்
கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.
அப்படத்திற்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுப்பார் என்று பார்த்தால் நடிகராக லவ் டுடே படத்தை இயக்கி அவரே நடித்தும் இருந்தார். கடந்த ஆண்டு இயக்குனர் அஷ்வின் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இளைஞர்களை கவரும் வண்ணம் படங்கள் நடித்து ரூ. 100 கோடி வசூல் வேட்டை கிளப்பில் இணைந்தார். சமீபத்தில் அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கிய டியூட் திரைப்படத்தில் நடித்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதி ரிலீஸ் ஆன இப்படம் செம சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
ஆதாரம் இல்லை எகிறி பேசிய குணசேகரன், ஒரு விஷயம் கூறி ஆப் செய்த ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
ஓடிடி ரிலீஸ்
ரிலீஸ் ஆன நாள் முதல் நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் 10 நாட்களில் சுமார் ரூ. 100 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் மாஸாக ஓடும் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வந்துள்ளது.
அதாவது நெட்பிளிக்ஸ் இப்படத்தின் ஓடிடி உரிமத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாகவும், வரும் நவம்பர் 14ம் தேதி இப்படம் ஓடிடியில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.