Dude திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் சில நடிகர்கள் நட்சத்திரமாக மாறுவார்கள், அப்படி முதல் 2 படத்திலேயே முன்னணி நடிகர்கள் போல் நட்சத்திரமாக ஜொலிக்க ஆரம்பித்த, இந்த Dude மூலம் ஹாட்ரிக் அடித்தாரா, பார்ப்போம்.
கதைக்களம்
ப்ரதீப், மமிதா சர்ப்ரைஸ் ஈவண்ட் செய்யும் டியூட் என்ற கம்பெனி வைத்து நடத்தி வருகின்றனர். இந்த கட்டத்தில் மமிதாவிற்கு ப்ரதீப் மீது காதல் வருகிறது, இருவருமே மாமா பொண்ணு, அத்தை பையன் தான்.
ஆனால், ப்ரதீப் சிறு வயதிலிருந்து உன்னை என் ப்ரண்ட் ஆக தான் பார்க்கிறேன் என சொல்கிறார், இதனால் மனமுடைந்த மமிதா மேல் படிப்பு படிக்க செல்கிறார்.
இந்த இடைப்பட்ட காலத்தில் ப்ரதீப், மமிதாவை ரொம்பவும் மிஸ் செய்ய, ஒரு கட்டத்தில் அவருக்கு மமிதா மீது காதல் வர, ப்ரதீப் மமிதா அப்பா சரத்குமாரிடம் சொல்கிறார், இதை தொடர்ந்து தடபுடலாக இவர்கள் திருமண ஏற்பாடு நடக்கிறது.
சரத்குமார் மினிஸ்டர் என்பதால் இந்தியாவில் ஒட்டு மொத்த அரசியல் பிரபலங்களும் திருமணத்திற்கு வர, அங்கு வந்து மமிதா வேறு ஒருவரை காதலிப்பதாக சொல்ல, அதன் பிறகு மமிதா ஆசைப்பட்டவருடன் திருமணம் நடந்ததா? ப்ரதீப் இதற்காக என்ன செய்தார் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
படத்தின் முதல் பாதி பட்டாசு தான், புல் பொழுதுபோக்கு நா கேரண்டி என இறங்கி அடித்துள்ளனர், அதிலும் ப்ரதீப்-மமிதா திருமணத்தின் போது நடக்கும் கலாட்டா, ப்ரீ இண்டர்வெல் முழுவதும் செம ட்ரீட் தான், அதிலும் ஆணவக்கொலைக்கு எதிராக ப்ரதீப் பேசும் வசனம் கண்டிப்பாக வரவேற்கதக்கது.
அதை இந்த ஜெனரேஷன் சொன்ன விதம் அருமை. இத்தனை சுவராஸ்யத்துடன் முதல் பாதியை முடித்து, இரண்டாம் பாதியில் அதற்கான சுவாரஸ்யம் அப்படியே பாதியாக குறைகிறது. ஒரு இடத்திலேயே கதை சுற்றுவது போல் உள்ளது.
பெரிய சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் இல்லை என்றாலும், ஆங்காங்கே வரும் ஒன்லைன் கொஞ்சம் படத்தை காப்பாற்றுகிறது. டெக்னிக்கலாக படம் செம வலுவாகவே உள்ளது, சாய் அபயங்கர் பின்னணி இசை, பிறகு வந்தனம் பாடல் தெறிக்கிறது. 2கே கிட்ஸ் தேசிய கீதமாக சில நாட்கள் ஒலிக்கும்.
க்ளாப்ஸ்
ப்ரதீப் ஒன் மேன் ஷோவாக கலக்குகிறார்.
கதைக்களம்
படத்தின் முதல் பாதி டெக்னிக்கல் விஷயங்கள்
பல்ப்ஸ்
சுவாரஸ்யம் இல்லாத இரண்டாம் பாதி.
மொத்தத்தில் இந்த Dude குறை இருந்தாலும் சொல்ல வந்த விஷயத்திற்காக கண்டிப்பாக ஒரு HiFi சொல்லலாம்.