ஒரு பொண்ணு வாழ்க்கைய கெடுத்துட்டு நீ பேசுறியா... வெளியில் போகும் முன் மிரட்டிய பிரதீப்
பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவருக்கு எதிராக மொத்தமாக பல பெண்கள் புகார் சொன்னதால் கமல் அந்த முடிவை எடுத்து இருக்கிறார்.
எனக்கு இந்த அதிகாரம் இருக்கிறது என்றாலும், ஒவ்வொரு போட்டியாளராக வந்து என்ன நினைக்கிறீர்கள் என சொல்லி democratic முறையில் அந்த ரெட் கார்டை வழங்கப்போவதாக கூறினார் கமல்.
நிக்சனை மிரட்டிய பிரதீப்
ஒவ்வொரு போட்டியாளராக கன்பெக்ஷன் ரூம் அழைத்து கமல் பேசினார். அப்போது இறுதியாக பிரதீப் மற்றும் நிக்சன் ஆகியோர் மட்டுமே எஞ்சி இருந்தனர்.
'ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுத்துட்டு நீ பேசுறியா' என பிரதீப் நிக்சனை அந்த நேரத்திலும் மிரட்டினார். அந்த விஷயத்தை கமலிடம் நிக்சன் சொல்ல 'அதற்கான தண்டனை அவருக்கு கிடைக்கும்' என கமல் கூறி, அதன் பின் பிரதீப்பை அழைத்து அப்படியே வெளியே போய்டுங்க என சொல்லி இருக்கிறார்.