சரவெடி வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப் ரங்கநாதனின் டூட் திரைப்படம்... முதல் நாள் வசூல் விவரம்...
டூட் படம்
அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்க பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு ஜோடியாக நடிக்க சமீபத்தில் வெளியான படம் டூட்.
சரத்குமார், ரோகிணி, டிராவிட் உள்ளிட்டோரும் நடித்துள்ள இப்படம் நேற்று செம மாஸாக வெளியானது. லவ் டுடே, டிராகன் போன்று இந்தப் படத்தையும் வெற்றியாக கொடுத்து ஹாட்ரிக் அடிப்பாரா என்ற கேள்வி பலரிடம் இருந்தது.
டூட் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் தங்களுக்கு முழு திருப்தியை கொடுத்திருப்பதாகவே கூறி வருகிறார்கள்.
பாக்ஸ் ஆபிஸ்
தீபாவளியை மக்கள் ஒருபக்கம் சரவெடி போல் கொண்டாடி வர டூட் திரைப்படமும் வசூல் வேட்டையில் சரவெடி கலெக்ஷன் செய்து வருகிறது.
முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ. 22 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாம். தயாரிப்பு நிறுவனமே இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.