கோமாளி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா? இயக்குனர் பிரதீப் பேட்டி
பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த திரைப்படம் கோமாளி. இப்படத்தின் மூலம் தான் பிரதீப் ரங்கநாதன் இயக்குனராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
கோமாளி படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவர் இயக்கியுள்ள திரைப்படம் லவ் டுடே. இப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
அண்மையில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் கூட மாபெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.
பேட்டி
இந்நிலையில், வருகிற நவம்பர் 4ஆம் தேதி வெளியாகவுள்ள லவ் டுடே படத்திற்காக நமது சினிஉலகம் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள பிரதீப் ரங்கநாதன், கோமாளி படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்த பிரபு தேவா என்றும், லவ் டுடே படத்தை பற்றியும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார்.
இதோ அந்த முழு Interview..