பிரதீப் ரங்கநாதனின் LIK திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட் இதோ
பிரதீப் ரங்கநாதன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குநராக இருந்த இவர் முழு நேர நடிகராகவும் மாறிவிட்டார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK மற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் Dragon ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் Dragon திரைப்படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி வெளிவரவுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கி வரும் LIK (Love Insurance Kompany) திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கிறார்.
மேலும் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனின் தந்தை கதாபாத்திரத்தில் அரசியல்வாதியும், நடிகருமான சீமான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ரிலீஸ் அப்டேட்
7 ஸ்க்ரீன் லலித் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வருகிற மே மாதம் 16ஆம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

கைவிடப்பட்ட குழந்தையை மீட்ட இளம்பெண்: பிரபல நடிகையின் சகோதரி குஷ்பூவுக்கு குவியும் பாராட்டுகள் News Lankasri
