விக்னேஷ் சிவனை தொடர்ந்து வெற்றி இயக்குநருடன் கைகோர்க்கும் பிரதீப் ரங்கநாதன்.. அடுத்த 100 கோடி உறுதி
பிரதீப் ரங்கநாதன்
2019-ல், கோமாளி திரைபடத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இப்படம் மாபெரும் வெற்றியை அவருக்கு தேடி கொடுத்தது.
இதை தொடர்ந்து 2022-ல், லவ் டுடே என்ற படத்தில் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் களமிறங்கினார். நடிகராக அறிமுக படத்திலேயே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியை சுருசித்தார்.
இதன்பின், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் திரைபடம் தான் LIC லவ் இன்சுரன்ஸ் கார்பொரேசன். இதில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் கீர்த்தி செட்டி நடிக்கிறார்கள். மேலும் நயன்தாராவும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.
வெற்றி இயக்குனருடன் ப்ரதீப்
இந்த திரைபடத்தின் பூஜை சமீபத்தில் நடந்து படப்பிடிப்பு ஆரம்பித்துள்ள நிலையில், அடுத்ததாக ஓ மை கடவுளே திரைபடத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உடன் பிரதீப் ரங்கனாதன் மூன்றாவது திரைபடதில் கதாநாயகனாக இணைந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த ஓ மை கடவுளே எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.