லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?... பிறந்தநாள் ஸ்பெஷல்
பிரதீப் ரங்கநாதன்
குறும்படங்கள் இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்தவர்கள் பலர், அந்த லிஸ்டில் இருப்பவர்களில் ஒருவர் தான் பிரதீப் ரங்கநாதன்.
கடந்த 2019ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மிகப்பெரிய ஹிட்டான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் குவித்தது.
அப்படத்திற்கு பின் லக் டுடே படம் இயக்கியதோடு அதில் நடித்தும் இருந்தார். ரூ. 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் செம பிளாக் பஸ்டர் ஹிட் ஆகி ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் குவித்தது.
லவ் டுடே படத்திற்கு ரூ. 1.5 கோடி சம்பளம் பெற்றவர் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, டிராகன் படங்களுக்கக ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சொத்து மதிப்பு
பிரதீப் ரங்கநாதனின் சினிமா பயணம் குறுகிய காலத்தில் ஜெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. இவரது சொத்து மதிப்பு ரூ. 20 கோடிக்கு மேல் இருக்குமாம்.
இன்று பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.