டிராகன் படத்தின் லாபம் மட்டுமே இத்தனை கோடியா.. முன்னணி நடிகர்களை மிஞ்சிய பிரதீப்
டிராகன்
பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் டிராகன். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் ரூ. 37 கோடி பட்ஜெட்டில் உருவானது.
இதனை இப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ப்ரோமோஷன் பேட்டியில் கூறியிருந்தார். இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 110 கோடிக்கும் மேல் மேல் வசூல் செய்துள்ளது.
லாபம்
இந்த நிலையில், டிராகன் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைக்கப்போகும் லாபம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் மூலம் ரூ. 50 கோடிக்கும் மேல் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
முன்னணி நடிகர்களையே மிஞ்சும் அளவிற்கு வளர்ந்து வரும் ஹீரோவான பிரதீப் ரங்கநாதனின் படம், இந்த அளவிற்கு லாபம் கொடுக்கவுள்ளது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.