டிராகன் புகழ் பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தில் 3 நடிகைகளா..யார் யார் தெரியுமா?
பிரதீப் ரங்கநாதன்
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன்.
கோமாளி படத்தின் வெற்றி இவருக்கு நல்ல இயக்குநர் என்ற பெயரையும், விருதுகளையும் வாங்கி கொடுத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் LIK திரைப்படம் உருவாகி வருகிறது.
சமீபத்தில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான Dragon திரைப்படத்திலும் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார் பிரதீப்.
யார் யார் தெரியுமா?
இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக மூன்று நடிகைகளுடன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்து பிரதீப் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ள இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு திரைப்பட பிரபலம் மமிதா பைஜு நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது.
தற்போது, மேலும் இரண்டு நடிகைகள் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அனு இமானுவேல் மற்றும் சீரியல் நடிகை ஐஸ்வர்யா ஷர்மா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
