நடிகை பிரகதிக்கு இரண்டாம் திருமணமா? செய்தியால் கொந்தளித்த நடிகை
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் எக்கச்சக்க படங்களில் அம்மா ரோல்களில் நடித்து வருபவர் பிரகதி. அவர் பல வருடங்களுக்கு முன்பே விவாகரத்து செய்து விட்ட நிலையில், சிங்களாக தனது மகனை வளர்த்து வருகிறார்.
தனக்கு மீண்டும் திருமணம் செய்ய விருப்பம் இல்லை என பிரகதி இதற்கு முன்பே பேட்டிகளில் கூறி இருக்கிறார்.
வதந்தியால் கொந்தளித்த நடிகை
பிரகதி விரைவில் இரண்டாம் திருமணம் செய்ய போகிறார் என ஒரு பிரபல தெலுங்கு மீடியாவில் செய்தி வெளியாகி இருக்கிறது. அதை பார்த்து கொந்தளித்த நடிகை கோபமாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
"என்ன ஆதாரத்துடன் இப்படி பொய் செய்தி வெளியிட்டீர்கள், கொஞ்சமாவது பொறுப்புடன் இருங்க, அடுத்தவர் பர்சனல் லைப் பற்றி இப்படி ஒரு பெரிய மீடியாவே பொறுப்பில்லாமல் எழுதியதை கண்டிக்கிறேன்" என பிரகதி கோபமாக பேசி இருக்கிறார்.
வீடியோ இதோ..