விஜய் டிவி மீது செம கடுப்பில் ப்ரஜின் - சாண்ட்ரா ஜோடி! இன்ஸ்டாவில் கோபமான பதிவு
விஜய் டிவியின் சின்னத்தம்பி சீரியலுக்கு பிறகு அன்புடன் குஷி தொடரில் நடித்த ப்ரஜின் அது முடிந்தபிறகு வைதேகி காத்திருந்தாள் என்ற தொடரில் நடிக்க தொடங்கினார். ஜமீன் பரம்பரை பற்றிய அந்த கதையில் அவர் ஜமீன் வாரிசாக நடித்து வந்தார். சரண்யா துராடி ஹீரோயினாக நடித்து வருகிறார்.
மேலும் ப்ரஜின் ஒரு திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங்கும் தற்போது நடந்துவருகிறது. அதனால் வைதேகி காத்திருந்தாள் சீரியலுக்கு தேதி ஒதுக்குவதில் சில சிக்கல்கள் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் திடீரென சமீபத்தில் ப்ரஜின் நீக்கப்பட்டு அவருக்கு பதில் ராஜபார்வை சீரியல் புகழ் நடிகர் முன்னா சீரியல் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். இது ப்ரஜின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.
ஆனால் இது நடந்து சில நாட்களிலேயே வைதேகி காத்திருந்தாள் சீரியல் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது கர்மா என ப்ரஜின் மற்றும் அவரது மனைவி சாண்ட்ரா இருவரும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கின்றனர்.
அதை பார்த்தால் அவர்கள் விஜய் டிவி மீது செம கடுப்பில் இருப்பது போல் தான் தெரிகிறது.