‘வைதேகி காத்திருந்தாள்’ தொடரில் இனி பிரஜின் வரமாட்டார் ! அவருக்கு பதிலாக மாற்றப்பட்ட நடிகர்..
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் பிரஜின், இவர் பல முக்கிய சீரியல்களில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே விஜய் டிவி தொலைக்காட்சியில் தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘வைதேகி காத்திருந்தாள்’. இதில் பிரஜின் ஹீரோவாகவும் சரண்யா ஹீரோயினாகவும் நடித்து வந்தனர்.
இந்நிலையில் தனக்கு வந்த சினிமா வாய்ப்புகளால் சீரியலுக்கு கால்ஷீட் தருவதில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து திடீரென இந்த சீரியலில் இருந்து பிரஜின் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவருக்கு பதிலாக ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க பல பேரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், தற்போது ராஜபார்வை தொடரில் நடித்த முன்னா தான் வைதேகி காத்திருந்தாள் தொடரில் நடிப்பதாக தெரிவந்துள்ளது.