சீரியல் நடிகர் பிரஜினா இது? இப்படி ஆளே மாறிட்டாரே.. போட்டோ இதோ
விஜய் டிவி சின்னத்தம்பி சீரியல் புகழ் நடிகர் பிரஜின் தற்போது அதே சேனலில் வைதேகி காத்திருந்தாள் என்ற தொடரில் நடித்து வருகிறார். மேலும் அவர் ஹீரோவாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
அந்த படத்தில் வனிதா விஜயகுமாரும் ஒரு ரோலில் நடித்து வருகிறார். பூஜை சில வாரங்களுக்கு முன்பு நடந்த நிலையில் தற்போது அதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோ ஒன்றை தற்போது வனிதா வெளியிட்டு இருக்கிறார். அதில் பிரஜின் வித்யாசமான கெட்டப்பில் இருக்கிறார். அது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் இப்படி மாறிட்டாரே என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் ப்ரஜின் நீண்ட தாடி உடன் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கும் ஒரு போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.