கணவருடன் வாழ்ந்த அந்த வாழ்க்கை, ஏற்பட்ட வலி- பிரகாஷ் ராஜ் முதல் மனைவி லலிதா எமோஷ்னல்
பிரகாஷ் ராஜ்
தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நிறைய வில்லன் நடிகர்கள் உள்ளார்கள், உடனே நியாபகம் வருவது பிரகாஷ் ராஜ் தான்.
இவர் வில்லனாக இல்லாமல் பல விதமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் மட்டுமில்லாது இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி, தொகுப்பாளர் என பன்முகம் கொண்டு கலக்கியவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ள இவர் காஞ்சிவரம் என்ற தமிழ் படத்திற்காக 2007ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.
இருவர் படத்திற்காக 1998ம் ஆண்டு சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.
முதல் மனைவி
நடிகர் பிரகாஷ் ராஜ் லலிதா என்ற நடிகையை காதலித்து 1994ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
16 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2009ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அண்மையில் ஒரு பேட்டியில் லலிதா பேசும்போது, விவாகரத்திற்கு பிறகு மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன், அப்போது என் அக்கா, அண்ணன் என என் குடும்பத்தினர் என்னுடன் இருந்தனர்.
அது மட்டுமில்லாமல் என் இரண்டு மகள் என் கூட இருந்தது எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. இதுதான் வாழ்க்கை என்று முடிவு செய்துவிட முடியாது, ஏன் என்றால், இந்த உலகத்திற்கு தனியாகத்தான் வந்தோம், தனியாகத்தான் போக போகிறோம்.
இதன் இடைப்பட்ட காலத்தில் வரும் எந்த உறவும் நிலையானது இல்லை என்பதை நாம் புரிந்து கொண்டேன் என தனது வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயம் குறித்து கூறியுள்ளார்.