கில்லி படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் முதல் சாய்ஸ் இல்லையா?- முதலில் தேர்வானது யார் தெரியுமா?
விஜய்யின் கில்லி
தமிழகத்தின் திரையரங்குகளில் பட்டிதொட்டி எங்கும் கலக்கிவரும் ஒரு திரைப்படம் விஜய்யின் கில்லி.
இது புது ரிலீஸ் கிடையாது, ஆனால் புது பட ரிலீஸை தாண்டி இந்த படத்திற்கு தான் கூட்டம் அதிகமாக வருகிறது. காரணம் விஜய்யின் கில்லி படம் அந்த அளவிற்கு ரசிகர்களின் பேவரெட் படமாக உள்ளது.
படம் ரிலீஸ் ஆகி பல வருடங்கள் ஆகியும் இப்போதும் ரசிகர்கள் கொண்டாடுவது மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது. விஜய் என்றாலே பாக்ஸ் ஆபிஸ் மன்னன் தான், அவரது கில்லி படமும் ரீ-ரிலீஸிலும் மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
முதல் சாய்ஸ்
விஜய்யை போல கில்லி படத்தால் கொண்டாடப்படுபவர் நடிகர் பிரகாஷ் ராஜ், முத்துப்பாண்டியாக அசத்தியிருப்பார்.
அவர் த்ரிஷாவை பார்த்து செல்லமே என்ற வார்த்தை கூறுவது இப்போது ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. படத்தில் முக்கியமான இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க கிட்டத்தட்ட 8 பேரை ஆடிஷன் செய்துள்ளார் தரணி.
அதில் ஒருவர் நடிகர் பிரசாந்த் தந்தை தியாகராஜன், ஆனால் யாரையும் தரணிக்கு ஓகே செய்ய தோன்றவில்லை. எனவே கடைசியாக பிரகாஷ் ராஜிடம் கூறி செய்து நடிக்க வைத்து மாஸ் படத்தை இயக்கி வெற்றிக்கண்டுள்ளார் தரணி.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
