நாத்திகர் பிரகாஷ்ராஜ்.. அம்மாவுக்கு கிறிஸ்தவ முறைப்படி இறுதி சடங்கு செய்தது ஏன்? விமர்சனத்திற்கு பதிலடி

By Parthiban.A Apr 02, 2026 04:49 PM GMT
Report

வில்லன் ரோல் என்றாலும் சரி, அல்லது குணச்சித்திர ரோல் என்றாலும் சரி, தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருபவர் பிரகாஷ் ராஜ். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

மேலும் தீவிரமாக அரசியல் கருத்துக்களையும் அவர் சமீபகாலமாக வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக பாஜகவுக்கு எதிராக அவர் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன்பு பிரகாஷ்ராஜின் தாய் மரணமடைந்த நிலையில் அவருக்கு கிறிஸ்தவ முறைப்படி இறுதி சடங்குகளை செய்தார் பிரகாஷ் ராஜ். அது பற்றி சிலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து இருக்கின்றனர்.

நாத்திகர் பிரகாஷ்ராஜ்.. அம்மாவுக்கு கிறிஸ்தவ முறைப்படி இறுதி சடங்கு செய்தது ஏன்? விமர்சனத்திற்கு பதிலடி | Prakash Raj Reply To Criticism On Mother Funeral

பதிலடி

நாத்திகரான பிரகாஷ் ராஜ் எதற்காக அம்மாவுக்கு கிறிஸ்தவ முறைப்படி இறுதி சடங்கு செய்தார் என கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அதற்கு பதிலடி கொடுத்திருக்கும் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் ஒரு பதிவை போட்டு இருக்கிறார்.

"ஆம் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனால் என்னுடைய அம்மா அவருடைய கடவுளை நம்பினார். அதை மறுக்க நான் யார். அவருடைய நம்பிக்கையின் அடிப்படையில் இறுதி அடக்கம் செய்யும் உரிமையை மறுக்க நான் யார். அது அவருக்கு நான் தரும் அடிப்படை மரியாதை. இப்படி வெறுப்பை உமிழும் அரக்கர்களுக்கு இது புரியுமா" என பிரகாஷ்ராஜ் காட்டமாக கேட்டிருக்கிறார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US