அதை நான் தெரியாமல் செய்துவிட்டேன், மன்னித்துவிடுங்கள்... வருந்திய நடிகர் பிரகாஷ் ராஜ்
சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்து மக்கள தவறாக வழி நடத்தியதற்காக நடிகர்களுக்கு எதிராக தொழிலதிபர் புனித்ரா சர்மா குற்றம் சாட்டினார்.
நடிகர்கள் கொடுத்த விளம்பரத்தை நம்பி மக்கள் பலர் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இதில் இழந்துவிடுகிறார்கள், வேறு வழி தெரியாமல் தற்கொலை செய்யும் நிலைக்கும் சென்று விடுகிறார்கள்.
எனவே சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறி வழக்கு தொடர்ந்தார், இதனால் தெலுங்கானா போலீஸ் வழக்கு பதிவு செய்தனர்.
புகாரின் அடிப்படையில் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், மஞ்சு லஷ்மி, நிதி அகர்வால்,வர்ஷினி சௌந்தர்யா என 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரகாஷ் ராஜ்
இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், நான் பெட்டின் ஆப் விளம்பரத்தில் நடித்தேன், அனைவரையும் கேள்வி கேட்கும் நான் இதற்கு பதில் சொல்லி ஆக வேண்டும். 2016ம் ஆண்டு இதுபோன்ற ஒரு விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது, நடித்தேன்.
ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு தவறை உணர்ந்தேன், ஒப்பந்தம் காரணமாக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.9 வருடத்திற்கு முன்பு நான் தெரியாமல் செய்த தவறு, இதற்காக நான் தற்போது மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
தயவுசெய்து இளைஞர்கள் இதுபோன்ற சூதாட்ட செயலியை பயன்படுத்தி பணத்தை இழக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என வீடியோவில் பேசி உள்ளார்.

Post Office -ன் 2 வருட சூப்பர் திட்டம்.., ரூ.2 லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
