சினிமா பிரபலம் அரசியலுக்கு உதவாது.. விஜய்யின் அரசியல் வருகை பற்றி பிரகாஷ் ராஜ் பேச்சு
பிரகாஷ் ராஜ்
வில்லன், ஹீரோ, காமெடியன் எனப் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் பிரகாஷ் ராஜ்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். சினிமாவை தாண்டி மத்திய அரசுக்கு எதிராகவும், பா.ஜனதாவுக்கு எதிராகவும் தொடர்ந்து பல கருத்துக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
விஜய்யின் அரசியல் வருகை
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரகாஷ் ராஜ், விஜய் அரசியல் வருகை குறித்து பேசி இருக்கிறார்.
அதில் அவர், விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதில் தயக்கமில்லை. ஆனால் அவர் அரசியலுக்கு வந்தால் அவரிடமும் கேள்வி கேட்பேன்.
எம்ஜிஆர், என்டிஆர் காலம் வேறு. தற்போதைய காலம் வேறு. சினிமாவில் கிடைக்கும் பிரபலம் அரசியலுக்கு உதவாது என்று கூறியுள்ளார்.
ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்!..எகிறும் எதிர்பார்ப்பு

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
