12 வயது வித்தியாசம்.. அரசியல் பேச்சால் பறிபோகும் வாய்ப்பு! - பிரகாஷ் ராஜ் மனைவி
நடிகர் பிரகாஷ் ராஜ் முன்னணி நடிகர் மட்டுமின்றி தற்போது அரசியல் விஷயங்கள் பற்றியும் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருபவர். குறிப்பாக பாஜக-வை எதிர்த்து தொடர்ந்து அவர் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அவர் விஜய்யை தாக்கியும் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மறுநாள் விஜய்யை ஜனநாயகன் ஷூட்டிங்கில் பார்த்தால் 'செல்லம்' என குறிப்பிட்டு அவர் சகஜமாக பேசுவாராம். அரசியல் வேறு, இது வேறு என அவர் தெரிவித்திருந்தார்.

மனைவி பேட்டி
இந்நிலையில் பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவி போனி வர்மா தற்போது அளித்த பேட்டியில் தான் அவரை திருமணம் செய்தபோது வயது வித்தியாசத்தால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என கூறி இருக்கிறார்.
12 வயது மூத்தவராக பிரகாஷ் ராஜ் இருப்பது ஒருபக்கம், மேலும் தென்னிந்தியரை திருமணம் செய்தால் தினமும் சாம்பார் சாப்பிட்டே சாக வேண்டி இருக்கும் எனவும் என் குடும்பத்தினர் சொன்னார்கள் என போனி வர்மா கூறி இருக்கிறார்.
பிரகாஷ் ராஜ் தற்போது அரசியல் பேசுவதால் பல பட வாய்ப்புகள் பறிபோனது என குறிப்பிட்ட அவர், பல விளம்பரங்கள், படங்களில் நடிக்கும் ஒப்பந்தம் ரத்தாகி இருப்பதாக தெரிவித்தார்.
"ஒப்பந்தம் போட்டு அட்வான்ஸ் கொடுத்த பிறகும் தயாரிப்பாளர்கள் அவரை நிராகரித்து இருக்கிறார்கள்" என ஆதங்கத்துடன் அவர் பேசி இருக்கிறார்.
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan