தளபதி66 ஷூட்டிங்கில் இருந்து பிரகாஷ்ராஜ் வெளியிட்ட போட்டோ! இணையத்தில் படுவைரல்
பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66ல் நடித்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் தற்போது ஹைதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
விஜய் உடன் சரத்குமார், பிரகாஷ்ராஜ் உட்பட தென்னிந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஏற்கனவே வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் தளபதி 66 படப்பிடிப்பில் விஜய்யுடன் இருக்கும் ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ..
Hai Chellam sssss. We are back #thalapathy66 pic.twitter.com/K2mK2TlNgi
— Prakash Raj (@prakashraaj) May 22, 2022