படத்தை பார்த்து கண்ணீர் விட்டு அழுத பிரணிதா! என்ன படம் தெரியுமா?
தமிழில் சகுனி, மாஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருப்பவர் நடிகை பிரணிதா. தற்போது திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்ட அவர் கன்னடத்தில் மட்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
The Kashmir Files
இந்நிலையில் ப்ரணிதா 'The Kashmir Files' என்ற படத்தை பார்த்துவிட்டு கண்ணீர் விட்டதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்து இருகிறார்.
அந்த படத்தின் போஸ்ட்டரை பகிர்ந்த அவர் தானும் கணவர் நிதின் ராஜுவும் கண்ணீர் விட்டு அழுததாக கூறி இருக்கிறார். "Must-watch film for every Indian" என அவர் குறிப்பிட்ட அவர், படத்தை எல்லோரும் பாருங்கள் எனவும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

குவியும் வரவேற்பு
காஷ்மீரில் பண்டித்கள் 1990ல் சந்தித்த துயரங்கள் பற்றிய இந்த படத்திற்கு தற்போது அதிகம் ஆதரவு குவிந்து வருகிறது. நான்கு நாளில் 42 கோடி ருபாய் அளவுக்கு வசூலித்து இருக்கிறது இந்த படம்.
ஏற்கனவே அக்ஷய் குமார், யாமி கௌதம் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படம் பற்றி பதிவிட்டு இருக்கும் நிலையில் தற்போது பிரணிதா அந்த லிஸ்டில் இணைந்து இருக்கிறார்.