சகுனி, மாஸ் பட நடிகை பிரணிதா வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்து
நடிகை பிரணிதா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
பிரணிதா
தமிழில் கார்த்தி உடன் சகுனி, சூர்யா உடன் மாஸ் போன்ற படங்களில் நடித்து இருப்பவர் நடிகை பிரணிதா. அவர் தெலுங்கு, கன்னட சினிமாவில் தான் அதிகம் படங்கள் நடித்து இருக்கிறார்.
தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் அவர் அதிகம் பிரபலமான ஒருவர் தான். அவர் கடந்த வருடம் 2021ல் மே 30ம் தேதி தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

கர்ப்பம்
இந்நிலையில் பிரணிதா தான் கர்பமாக இருப்பதாக அறிவித்து இருக்கிறார். மூன்று மாதங்கள் நிறைவடைந்து இருப்பதாக அவர் பேட்டியில் தெரிவித்து உள்ளார். குடும்பத்தினருக்கு திருஷ்டி உள்ளிட்ட விஷயங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது என்பதால் மூன்று மாதங்கள் முடியும் வரை யாரிடமும் கர்ப்பம் பற்றி அவர் கூறவில்லையாம்.
தற்போது கணவருடன் எடுத்த போட்டோக்களை வெளியிட்டு இருக்கும் பிரணிதா தன் கணவரின் 34ம் பிறந்தநாளுக்கு சிறந்த கிப்ட் இது என கூறி இருக்கிறார்.