டாப் ஸ்டார் டைட்டில் எப்படி வந்தது, அந்தகன் படத்தில் என்ன ஸ்பெஷல்.. பிரஷாந்த் Exclusive Interview
நடிகர் பிரஷாந்த் நடிப்பில் அந்தகன் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. பிரஷாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். கார்த்திக், சிம்ரன், யோகி பாபு, வனிதா, பெசன்ட் ரவி, ஊர்வசி, கேஎஸ் ரவிக்குமார்
இந்த படத்தில் தனது ஒரு முக்கிய திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைத்ததாக பிரஷாந்த் கூறி இருக்கிறார். சினிஉலகத்திற்கு அளித்த Exclusive பேட்டியில் அவர் பேசும்போது தனது பியானோ வாசிக்கும் திறமையை வெளிக்காட்ட அந்தகன் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது என பிரஷாந்த் கூறி இருக்கிறார்.
டாப் ஸ்டார் டைட்டில் எப்படி வந்தது?
மேலும் டாப் ஸ்டார் என்ற டைட்டில் உங்களுக்கு எப்படி வந்தது, யார் வைத்தது என கேட்ட போது. "அந்த பட்டம் நானாக வைத்துக்கொண்டது அல்ல. அது ரசிகர்கள் எனக்கு கொடுத்த டைட்டில்."
"ரசிகர்களுக்காக தான் எல்லாமே செய்கிறேன். அவர்கள் விருப்பம் தான் என் விருப்பம்" என பிரஷாந்த் தனது ரசிகர்கள் பற்றி உருக்கமாக பேசி இருக்கிறார்.
பிரசாந்தின் முழு பேட்டி இதோ.