லோகேஷ் கனகராஜ் மாதிரி என்னால பண்ண முடியாது!! பிரஷாந்த் நீல் பேட்டி
சலார்
நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் பிரபாசுடன் ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ், ஈஸ்வரி ராவ், சரண் ஆகியோர் முக்கியமான கதாபத்திரதில் நடித்துள்ளனர். கே.ஜி.எப் படத்தை போலவே, சலார் திரைப்படமும் இரண்டு பாகங்களாக உருவாக்கவுள்ளார்.

பிரஷாந்த்
இந்நிலையில் பேட்டியொன்றில் பங்கேற்ற பிரசாந்த் நீல், சலார் திரைப்படத்தின் முதல் பாகத்தில் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் இருவரும் நண்பர்களாக நடித்துள்ளனர்.
இவர்களின் நட்புப் பயணத்தைத் தான் இரண்டு பாகங்களாக காட்டப் போகிறோம். சலார் படத்திற்க்கும் கே.ஜி.எப் படத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை.கே.ஜி.எப். 1980 பீரியட் களில் இருப்பது போன்றது. இந்தப் படம் தற்போதைய காலகட்டத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் படங்களை இணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்று பிரஷாந்த் நீல் பாரட்டுகளை தெரிவித்துள்ளார்.
