சம்பளத்தை உயர்த்திய கேஜிஎப் இயக்குனர் பிரஷாந்த் நீல்! இத்தனை கோடி கேட்கிறாரா?
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கேஜிஎப் 2 படம் தற்போது 1000 கோடி ருபாய் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது. இவ்வளவு பெரிய சாதனை படைத்து இருக்கும் முதல் கன்னட படம் இது.
கேஜிஎப் 2 படம் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வரும் நேரத்தில் தற்போது அதன் இயக்குனர் பற்றி ஒரு புது தகவல் வெளியாகி இருக்கிறது.
அடுத்து அவர் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தினை இயக்கி வருகிறார். மேலும் அவரை ஒப்பந்தம் செய்ய பல பெரிய தெலுங்கு தயாரிப்பாளர்கள் முயற்சிப்பதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் பிரஷாந்த் நீல் தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். அவர் அடுத்த படைத்திற்கு 50 கோடி ருபாய் சம்பளம் கேட்கிறாராம். இந்த தகவல் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
