சலார் படத்தை இயக்க பிரஷாந்த் நீல் வாங்கிய சம்பளம்.. முன்னணி ஹீரோக்களை மிஞ்சிவிட்டார்
பிரஷாந்த் நீல்
உக்ரம் படத்தின் மூலம் இயக்குனராக கன்னடத்தில் அறிமுகமானவர் பிரஷாந்த் நீல். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் கே.ஜி.எப்.
இதன் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து கே.ஜி.எப் 2ஆம் பாகம் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.

கே.ஜி.எப் 3 விரைவில் வரவிருக்கிறது. இப்படி மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாகிய பிரஷாந்த் நீல் இதற்குப்பின் இயக்கி கடந்த 22ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் சலார்.
பிரபாஸ், ஸ்ருதி ஹாசன், பிரித்விராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். மோசமான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட வசூலில் சலார் பட்டையை கிளப்பி வருகிறது.
சம்பளம்
இந்நிலையில், சலார் படத்தை இயக்குவதற்காக இயக்குனர் பிரஷாந்த் நீல் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தை இயக்க ரூ. 50 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் இயக்குனர் பிரஷாந்த் நீல். இதன் மூலம் பல முன்னணி ஹீரோக்களின் சம்பளத்தை விட இவருடைய சம்பளம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக அரசியலுக்கு வந்து நாடகத்தை நடிச்சுட்டு இருப்பவர் - விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின் IBC Tamilnadu
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri