நடிகர் பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள்.. யார் யார் தெரியுமா?
பிரஷாந்த்
90 களில் அஜித், விஜய் காட்டிலும் அதிக அளவில் ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் நடிகர் பிரஷாந்த். அதன் பின், சில காரணத்தால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார்.
மீண்டும் பல ஆண்டுகளுக்கு பின் அந்தகன் படத்தின் மூலம் பிரஷாந்த் கம்பேக் கொடுத்தார். இதனை அடுத்து விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான GOAT படத்திலும் பிரஷாந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
நானி தயாரிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'கோர்ட் ஸ்டேட் vs நோ படி'. தெலுங்கு படமான இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
யார் யார் தெரியுமா?
இந்த படம் தமிழில் ரீ-மேக் ஆக உள்ளது. இதன் உரிமையை நடிகர் பிரசாந்த்தின் அப்பா, இயக்குநர் தியாகராஜன் வாங்கியுள்ளார். இந்த படத்தை தமிழில் தியாகராஜன் இயக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.
இந்த படத்தில் பிரியதர்ஷி கதாபாத்திரத்தில் பிரசாந்த் மற்றும் சாய் குமார் கதாபாத்திரத்தில் தியாகராஜன் நடிப்பது உறுதியாகியுள்ளது.
மேலும், மற்ற முதன்மை கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசனின் மகன் கிரித்திக் மற்றும் ராஜ்குமார், தேவையாணி தம்பதியினரின் மகள் பிரியங்கா ஆகிய இருவரும் நடிக்கவுள்ளனர் என கூறப்படுகிறது.

கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri
